செய்திகள்

தமிழக மாவட்டங்களுக்கு மின் விடுமுறை நாட்கள்: மின்சார வாரியம்


தமிழக மாவட்டங்களுக்கு மின் விடுமுறை நாட்கள்: மின்சார வாரியம்
சென்னை,
 
வரும் திங்கள்கிழமை முதல் சென்னையில் 2 மணி நேர மின்தடை அமலுக்கு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒருநாள் மின்விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
 
அதன்படி ஈரோடு மாவட்டத்திற்கு திங்கட்கிழமையும், சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமையும்,  சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிகளுக்கு புதன்கிழமையும், கோவை பகுதிக்கு வியாழக்கிழமையும், நெல்லை, திருப்பூர் மற்றும் நீலகிரி பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமையும், திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமையும் தொழிற்சாலை வார மின்விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 12,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், நமக்கு 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. தினமும் 4 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்பற்றாக்குறை ஏற்படுகிறது.
 
பள்ளிகளுக்கு முடிந்தவரை தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் எனத்தெரிகிறது. காற்றாலை மின்உற்பத்தி ஜூன் மாதம் துவங்கும்போது மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் தெரிகிறது.
Share this post :

+ comments + 1 comments

9 March 2012 at 03:50

How to Watch sun news online television-live in mobile. Is their any website please replay me....

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...