செய்திகள்

தரை தட்டிய கப்பலை மீட்கும் பணி இன்று தொடக்கம்

நீலம் புயலினால் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கறையில் தரைதட்டிய பிரதிபா காவேரி எண்ணெய்க் கப்பலை மீட்கும் பணி இன்று தொடங்கும் என தெரிகிறது.இந்த மீட்பு பணிக்காக காக்கிநாடாவில் இருந்து மாளவியா மற்றும் கொச்சி துறைமுகத்தில் இருந்து SCI  RATNA  என்ற இரண்டு இழுவைக் கப்பல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.  இதனிடையே, கப்பலின் மீட்பு நடவடிக்கைகளுக்குச் செலவிட, அவசரமாக தேவைப்படும் 20 முதல் 25 கோடி ரூபாயை திரட்ட, வங்கிகளிடம் கடன் பெற கப்பல் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போல் 1966 மற்றும் 1995 ஆம் ஆண்டில் சென்னை கடலோரப் பகுதியில் தரைதட்டி நின்ற இரண்டு சரக்கு கப்பல்களை மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் அவ்விரு கப்பல்களும் கடற்கறையிலேயே உடைத்து எடுக்கப்பட்டன

.
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...