செய்திகள்

முஸ்லிம்கள் அப்பாவிகள் : "நிமேஷ் கமிஷன்" அறிக்கை!; போலீசை காப்பாற்றும் முயற்சியில் சமாஜ்வாடி அரசு!!


 உத்தர பிரதேசத்தில், முஸ்லிம்கள் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த சமாஜ்வாடி அரசு, முஸ்லிம் "சிறைவாசிகள்" குறித்த "நிமேஷ் கமிஷன்" அறிக்கையை அமல் படுத்துவதில் "அலட்சியம்" காட்டி வருகிறது.


கடந்த 2007ம் ஆண்டு, உ.பி.யின் லக்னவ், பைசாபாத் மற்றும் வாரணாசி பகுதிகளில் குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்தன. அப்போது, "மீடியாக்கள்" முஸ்லிம்களை குற்றப்பரம்பரையினராக சித்தரித்து "மணிக்கொரு முறை" கற்பனையான அவதூறு பிரச்சாரங்களை செய்து வந்தது. அதையடுத்து, அன்றைய மாயாவதி அரசு மேற்படி வழக்குகளில், முஹம்மத் தாரிக் காசிமி, காலித் முஜாஹித், சஜ்ஜாதூர்ரஹ்மான் மற்றும் அக்தர் வாணி ஆகியோர் மீது முறையே, பாராபங்கி காவல் நிலையத்தில் FIR No.1891/2007, லக்னவ் வசீர்கஞ் காவல் நிலையத்தில் FIR No.547/2007,  பைசாபாத் காவல் நிலையத்தில் FIR No.398/2007 மற்றும் கோரக்பூர் காவல் நிலையத்தில் FIR No.812/2007 ஆகிய எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.                                                                                                                                                                                                                                                                                                                                   குண்டுவெடிப்பின் தன்மையை குறித்து, அன்றைய உத்தர பிரதேச, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி, பிரிஜ்லால் குறிப்பிடும்போது, இந்த குண்டுவெடிப்புக்கள் ஹைதராத் "மக்கா மஸ்ஜித்" குண்டுவெடிப்பை ஒத்து உள்ளதாக கூறினார். அதையடுத்து, உ.பி. "ATS" மற்றும் "STF" படையினரால், முஸ்லிம்கள் மீது போடப்பட்ட வழக்கின் உண்மை தன்மைகளை கண்டறிய "நீதிபதி S.D.நிமேஷ்" அவர்களின் தலைமையில் "விசாரணைக்கமிஷன்" அமைத்து "மாயாவதி அரசு" உத்தரவிட்டது.                                                                                                                                                                                                                                                                                                                                             தாங்கள் ஆட்சிக்கு வந்தால், 3 மாதத்துக்குள் "நிமேஷ் கமிஷன்" அறிக்கை உட்பட, முஸ்லிம்கள் மீதான எல்லா வழக்குகளையும் விசாரிக்க கமிஷன்கள் அமைத்து அப்பாவி முஸ்லிம்கள் விடுதலைக்கு வழிவகுப்போம்,என கூறியது சமாஜ்வாதி கட்சி. இந்நிலையில், நீதிபதி நிமேஷ் கமிஷன், தனது அறிக்கையை இவ்வாண்டு "ஆகஸ்ட் 30 ந்தேதி" சமர்ப்பித்து விட்டது.  அதில், சிறையில் உள்ள முஸ்லிம்கள் அப்பாவிகள் எனவும், சட்டத்துக்கு புறம்பான முறையில், முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பல நாட்கள் கழித்து அவர்களின் கைது குறித்த அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டது உள்ளிட்ட, பல குற்றச்சாட்டுக்கள் "ATS" மற்றும் "STF" மீது நிமேஷ் கமிஷன் தெரிவித்துள்ளது.                                                                                                                                                                                                                                                       தவறு செய்த அதிகாரிகள், முன்பை போலவே இப்போதும் "மீடியாக்களின் துணையை" நாடிய வண்ணம் உள்ளனர். குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள போலீஸ் அதிகாரிகள் பலரும் தற்போது "பிரின்ட் மீடியா" மற்றும் "எலெக்ட்ரானிக்" மீடியாக்களின் அலுவலகங்களை அணுகி, தங்களின் செயலை நியாயப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட முயற்சித்து வருகின்றனர். இதற்கு, பா.ஜ.க., முழு அளவில் உதவி வருவதுடன், "நிமேஷ் கமிஷன்" அறிக்கையை ஏற்று முஸ்லிம்களை விடுதலை செய்யக்கூடாது, என உரக்க குரல் கொடுத்து வருகிறது.                                                                                                                                                                                                                         சமாஜ்வாடி அரசும், போலீசை காப்பாற்றும் முயற்சியில், "நிமேஷ் கமிஷன்" அறிக்கையை பகிரங்கமாக வெளியிட மறுத்து வருகிறது.

Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...