செய்திகள்

பாரிமுனை பள்ளியில் இன்று பயங்கரம் : ஆசிரியை குத்தி கொலை



























நிலைகுலைந்த உமா, அலறினார். ரத்தம் சொட்டச் சொட்ட 

வகுப்பில் இருந்து வெளியே ஓடி வந்தார். சத்தம் கேட்டு பக்கத்து வகுப்புகளில் இருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பதறியடித்து ஓடிவந்தனர். உமாவை குத்திய மாணவன் அங்கிருந்து தப்பியோட முயன்றான். அவனை மற்ற மாணவர்கள் விரட்டினர். கத்தியை காட்டி அவர்களை மிரட்டிய மாணவன், அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். ஆனால், ஆசிரியர்களும் ஊழியர்களும் விரட்டிச் சென்று அவனை மடக்கிப் பிடித்தனர். உயிருக்கு போராடிய உமாவை சக ஆசிரியர்கள் மீட்டு, உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உமா பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சட்டக் கல்லூரி காவல் நிலைய போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். உமாவை கத்தியால் குத்திய மாணவன், வகுப்பில் பாடம் நடக்கும்போது கவனம் செலுத்தாமல் விளையாடிக் கொண்டிருப்பானாம். அவனை நன்றாக படிக்கும்படி உமா நேற்று கண்டித்துள்ளார். வீட்டு பாடம் கொடுத்து எழுதி வரச் சொல்லியிருக்கிறார். வீட்டுப்பாடம் எழுதாமல் இன்று பள்ளிக்கு வந்த அவனை உமா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன், புத்தக பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உமாவை குத்திவிட்டான் என்று விசாரணையில் தெரியவந்தது. மாணவனை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. தகவல் பரவியதும் ஏராளமான பெற்றோர் அலறியடித்து பள்ளிக்கு வந்தனர். தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வகுப்பறையிலேயே ஆசிரியையை மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்தது சென்னையில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...