செய்திகள்

கர்நாடகாவில் துற்நாற்றமெடுக்கும் சங்கப்பரிவாரத்தின் நிலை


பெங்களூர்: கர்நாடகாவில் முதன் முதலாக ஆட்சியை பிடித்தோம் என்று பிதற்றிக்கொண்டிருந்த பா.ஜ.கவின் நிலை அம்மாநிலத்தில் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருக்கிறது. மக்கள் மன்றத்தில் பா.ஜ.க மற்றும் சங்கப்பரிவாரத்தின் கேடுகெட்ட குணங்கள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.





அமைச்சர்கள் ரசித்த காட்சிகள் பரவுவதால் பரபரப்பு


பதிவு செய்த நேரம்:2012-02-09 15:14:31

கர்நாடக சட்டசபையில் இருந்த போது நேற்றுமுன்தினம் அமைச்சரின் செல்போனுக்கு ஆபாச படங்கள் எம்எம்எஸ்சில் அனுப்பப்பட்டுள்ளன. அதில் உள்ள காட்சிகளை பார்க்க எம்எல்ஏக்கள் உள்பட அனைத்து தரப்பினருமே ஆர்வம் காட்டினர். இந்நிலையில், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 3 அமைச்சர்களும் வேறு வழியின்றி தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். பதவி பறிபோக காரணமாக இருந்த ஆபாச காட்சிகள் இப்போது மற்றவர்களுக்கு செல்போன் மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் பரவி வருகின்றன. இதனால் கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




கர்நாடக பா.ஜ.க அரசின் 2 அமைச்சர்கள் சட்டமன்றத்தில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்தது கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் வரலாற்றிலேயே இத்தகை சம்பவம் நடைபெறுவது இதுவே முதல் முறை. இக்கேடுகெட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் பிரபல் டி.வி. சேனல் ஒன்று இதனை ஒளிபரப்பியது.

சமீபத்தில் பிஜாபூர் மாவட்டத்தில் ஸ்ரீராம் சேனா அமைப்பினர் பாகிஸ்தான் கொடியை ஏற்றிய விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அமைச்சர்கள் லக்ஷ்மண் சாவடி மற்றும் பட்டீல் ஆகியோர் மொபைல் போனில் ஆபாச படங்களை பார்த்துக்கொண்டிருந்தனர்.

 இது தொடர்பாக இரு அமைச்சர்களும் மெளனம் காத்து வரும் நிலையில் அவர்கள் இருவரும் உடனே பதிவி விலக வேண்டுமென எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். முதலமைச்சர் சதானந்தா கெளடாவிடம் இது பற்றி கேட்டபோது அவர்கள் அவ்வாறு அவையில் வைத்து ஆபாச படங்களை பார்த்திருப்பார்களையானால் அவர்களுக்கு எதிராக அவைத்தலைவர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தான் இது தொடர்பாக டி.வி சேனல்களில் ஒளிப்பரப்பட்ட செய்தியினை பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். அவைத்தலைவர் கே.ஜி. போபையா கூறும் போது இது தொடர்பாக தான் விசாரிக்க இருப்பதாகவும், அது நீருபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 எதிர்கட்சித்தலைவர் சித்தார்மையா கூறும்போது அவர்கள் இருவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அவைத்தலைவர் அவர்களை இனி அவைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். முன்னால் முதலமைச்சர் குமாரசாமி அவ்விரு அமைச்சர்களையும் கடுமையாக சாடியுள்ளார். அவையின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர்கள் இருவரும் நீக்கப்பட வேண்டும் என்று கெளடாவை கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக பா.ஜ.கவின் தேசிய தலைவர் நிதின் கட்காரி கர்நாடக முதலைமைச்சரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக விசாரித்ததாக கூறப்படுகிறது.

 இதற்கு முன்பு தனது நண்பனின் மனைவியை பாலியல் வன்முறை செய்ததாக் குற்றம் சுமத்தப்பட்டு அமைச்சர் ஹாலப்பா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 கர்நாடகாவில் ஆட்சிப்பொறுப்பை ஏற்று சில வருடங்களிலேயே பா.ஜ.கவின் சாதனைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் இந்து கலாச்சாரம் என்றும் இராமர் கோயிலை கட்டுவோம் என்றும் பகல் வேஷம் போட்டுக்கொண்டிருக்கும் பா.ஜ.கவினரை கர்நாடக மக்கள் அடையாளம் கண்டு வருகின்றனர். இதனால் பா.ஜ.கவின் செல்வாக்கு படுகுழிக்குள் சென்று கொண்டிருக்கிறது.


கர்நாடகாவில் பா.ஜ.கவின் மகத்தான சாதனைகள்:

 1. முன்னால் முதலமைச்சர் எடியூரப்பா ஊழலில் ஈடுபட்டு முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாக‌ சிறையில் அதாவது அவர்களது பாஷையில் வனவாசம் சென்றார்.

 2. அமைச்சர் ரேணுகச்சார்யா ஒரு தனியார் மருத்துவமனையில் பணி புரியும் நர்ஸை (செவிலி) முத்தமிட்டுள்ளார். அந்த செவிலிப்பெண் தன்னை ரேணுகச்சார்யா கற்பழித்து விட்டதாகவும் தன்னை மிரட்டி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

 3. அமைச்சர் ஹாலப்பா இன்னொரு நபரின் மனைவியை கற்பழித்து அமைச்சர் பதவியை இழந்தார்.

 4. பா.ஜ.கவின் சக அமைப்பான ஸ்ரீராம் சேனாவின் உறுப்பினர்கள் தாங்களாகவே பாகிஸ்தான் கொடியை ஏற்றிவிட்டு முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். பின்னர் அவர்களது கோர முகம் வெளிக்கொண்டுவரப்பட்டது தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

 5. தற்போது பா.ஜ.கவின் இரு அமைச்சர்கள் சட்டமன்றத்தில் வைத்து ஆபாச வீடியோ காட்சியை பார்த்து தனக்கு வாக்களித்த கர்நாடக மக்களை முட்டாளாக்கியுள்ளனர்.
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...