| Susanne Eman எனும் அமெரிக்கப் பெண்ணையே இங்கு நீங்கள் காண்கிறீர்கள். 32 வயதாகும் இவரிற்கு இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இப் பெண் ஏன் இப்படி சாப்பிடுகிறார் தெரியுமா? எல்லாம் ஒரு சாதனைக்காகத்தான். ஆம் தற்போது 320 கிலோகிராம் நிறையுடைய இவரிற்கு தன் நிறையை 770 கிலோகிராமாக அதிகரித்து உலக சாதனைபடைப்பதே இவரின் நோக்கம்.! தினமும் 21000 கலோரி அளவுள்ள உணவுகளை உண்கிறார். உலகில் பல்வேறு பகுதிகளில் உணவு இல்லாமல் பசியால் உயிரிழப்போர் ஒருபுறம், அதீத எடையால் வாழமுடியாது முடங்கிப்போனோர் இன்னோர் புறம் இருக்க இப் பெண் இப்படி சாதிக்க எடுத்த முடிவு பலரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் நேற்றுப்பார்த்த பெண் தான் உயிர் வாழ்வதற்காக அதீத உணவருந்துகிறார். ஒவர் சாதிப்பதற்காக. உலகின் ஒவ்வொரு மூலையும் ஒவ்வொரு வகையே. :) |

Post a Comment