பெர்த்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 3 நாடுகள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பில் 46.4 ஒவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் விராத் கோலி அபாரமாக ஆடி அரைச் சதம் அடித்தார்.
ஜடேஜா-அஸ்வின் சிறப்பான ஆட்டம்
ஒரு கட்டத்தில் தோனி, ரெய்னா அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். அதுமட்டுமின்றி நிலைத்து நின்று சிறப்பாக விளையாடிய கோலியும் ரன் அவுட் ஆனார். இதனால் இந்திய அணிக்கு இலக்கை எட்டுவதில் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் ஜடேஜா-அஸ்வின் ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 55 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மீண்டும் ஏமாற்றினார் சச்சின்
இந்நிலையில் சிறப்பாக விளையாடி வந்த லிட்டில் மாஸ்டர் சச்சின் 48 ரன்கள் எடுத்திருந்த போது மேத்தியூஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து தொடர்ந்து 27வது முறையாக 100வது சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் சச்சின்.

Post a Comment