செய்திகள்

உத்தரகாண்ட்டில் குழந்தையை பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி


உத்தரகாண்ட்டில் குழந்தையை பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி
டேராடூன்,
 
உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்ற மாணவி ஒருவர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தகவலறிந்த போலீசார் இதுகுறித்த விசாராணையை தொடங்கியுள்ளனர்.
 
அருணாசலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் உத்தரகாண்ட் மாநிலம் உள்ள முசோரியில் மத்திய அரசால் நடத்தப்படும் விடுதியில் தங்கி அங்குள்ள அரசுப் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று அவர் கடுமையான வயிற்று வலியார் துடித்தார். அதனைத் தொடர்ந்து அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் ஆஸ்பத்திரி நிர்வாகம் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தது.
 
போலீசார் ஆஸ்பத்திரியில் உள்ள மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தான் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், ஹிமாசலப் பிரதேசம் தர்மசாலா பகுதிக்கு கடந்த வருடம் ஜீன் மாதம் விடுமுறைக்கு சென்றிருந்த போது ஒரு பையனுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறினார்.
 
இதுபற்றி போலீசார் அந்த பையனைப் பற்றி விசாரித்து வருகின்றனர். மாணவியின் பெற்றோர்களுக்கும் இதுகுறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இருந்தபோதிலும் இந்த சம்பவம் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் மாணவி கர்ப்பம் காரணமாக பள்ளி மற்றும் விடுதி அதிகாரிகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
Share this post :

Post a Comment

 
Support : Tech Media | Mass Media | Copyright © 2012. செய்திகள் - All Rights Reserved
Site Created by Tech Media Published by News star
Proudly powered by Kingdom of கீழக்கரை...